சினிமா செய்திகள்

ஒரே படத்தில் மம்முட்டி, மோகன்லால், கமல்ஹாசன்? ஆச்சரிய தகவல்

Published

on

ஒரே படத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஓடிடி தளங்கள் வந்த பிறகு தற்போது அந்த திரைப்படங்கள் புகழ் பெற்று வருகின்றன என்பதும் சமீபத்தில் வெளியான புத்தம் புது காலை விடியாதோ என்ற ஆந்தாலஜி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலையாள ஆந்தாலஜி திரைப்படம் ஒன்று உருவாக இருப்பதாகவும் எம்டி வாசுதேவன் என்பவரின் சிறுகதைகளை பயன்படுத்தி உருவாகும் மலையாள ஆந்தாலஜி படத்தில் மம்முட்டி, மோகன்லால் மற்றும் கமல்ஹாசன் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் பகத் ஃபாசிலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் மலையாள திரையுலகை மட்டுமின்றி தமிழ் திரையுலகையும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version