தமிழ்நாடு

மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது: கமல்ஹாசன்

Published

on

தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, மகளிர்களுக்கு பேறுகால விடுப்பு அதிகரிப்பு, குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1000 உள்பட பல சிறப்பு அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது

ஆனால் அதே நேரத்தில் அதிமுக மற்றும் பாஜகவை சேர்ந்தவர்கள் இந்த பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் என்பதும் எதிர்பார்த்த அம்சங்கள் ஒன்றுகூட இல்லை என அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவ்வப்போது தனது டுவிட்டர் மூலம் அரசியல் கருத்துக்களை தெரிவித்து வரும் கமலஹாசன் இந்த பட்ஜெட்டை குறை கூறி டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் அதிமுகவுக்கு மட்டுமின்றி திமுகவுக்கும் எதிராகவும் அரசியல் செய்து வருவது போல் தோன்றும் நிலையில் இந்த டுவிட் அதனை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட் குறித்து கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவற்றுக்கும், பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவைகளுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. மாற்றத்திற்கான பட்ஜெட்டை எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே எஞ்சுகிறது.

seithichurul

Trending

Exit mobile version