தமிழ்நாடு

ஓர் அநீதியான தேர்வை இன்று தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள்: கமல்ஹாசன்

Published

on

ஒரு அநீதியான தேர்வை இன்று தமிழகத்தில் உள்ள 1.10 தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் இன்று மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதும், அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வை வரவேற்று உள்ளன என்பதும் தெரிந்ததே.

தமிழகத்தில் கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கூட நீட் தேர்வுக்கு பெரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சியினரும் அரசியல் காரணமாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பதும் எதிராக பல மாதங்களாக நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதிலும் இன்று நீட் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுகிறது என்பதும் தமிழக மாணவர்களும் இந்த தேர்வை எழுதி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் நீட் தேர்வு குறித்து தனது டுவிட்டரில் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!

Trending

Exit mobile version