தமிழ்நாடு

இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது, நீதிமன்றம் இடித்து கொண்டிருக்கின்றது: கமல்ஹாசன் டுவிட்

Published

on

இந்திய அல்லாடிக் கொண்டிருக்கிறது நீதிமன்றம் இடித்துரைத்து கொண்டிருக்கிறது, இது ஒரு அரசுக்கு பெருமைக்குரியது அல்ல என கமல்ஹாசன் காட்டமாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பில் உள்ளது. தினமும் மூன்று லட்சத்திற்கும் மேலானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய மாநில அரசுகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. சுப்ரீம் கோர்ட் உள்பட பல்வேறு நீதிமன்றங்களும் அரசு உடனடியாக கொரோனா வைரஸுக்கு எதிரான தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றன என குற்றம் சாட்டிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் தற்போது இது குறித்து காட்டமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

அலட்சியக் கிருமித் தாக்குதலாலும் இந்தியா அல்லாடிக்கொண்டிருக்கிறது. மத்திய அரசின் நிலைப்பாட்டால், தடுப்பூசிகளின் விலை திடுமென உயர்ந்திருக்கிறது. மக்களைக் காப்பது அரசின் பொறுப்பு என நீதிமன்றம் இடித்துச்சொல்லும் நிலைமை பெருமைக்குரியது அல்ல.

seithichurul

Trending

Exit mobile version