தமிழ்நாடு

பொதுத்தேர்வை போல் பொதுத்தேர்தலிடம் முதலிடம்: ஸ்ரீப்ரியா வீடியோவை ரீடுவிட் செய்த கமல்ஹாசன்!

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில், ‘பொதுத்தேர்வுகளில் பெண்கள் முதலிடம் பிடிப்பது போல பொதுத் தேர்தல்களிலும் முதலிடம் பிடிக்க வேண்டும். சமவாய்ப்பு, சமநீதி என மாதர் நலம் போற்றும் மநீமவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறி ஸ்ரீப்ரியாவின் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் ஸ்ரீப்ரியா கூறியிருப்பதாவது:

2016 ஆம் ஆண்டு 74 சதவீதம் பெண்கள் வாக்களித்துள்ளார்கள். ஆனால் ஆண்கள் 75 சதவீத ஆண்கள் வாக்களித்துள்ளார்கள். நம்முடைய நாட்டில் ஆண்களை விட பெண்கள்தான் ஜனத்தொகையில் அதிகம். அவ்வாறு இருக்கும்போது நாம் ஏன் பின் தங்கவேண்டும்? வரும் தேர்தலில் நாம் 100% வாக்களித்து ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும்.

இந்த 2021 ஆம் மகளிர்தின கொள்கை என்னவெனில் ஒரு சவாலை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் சவால்களை சந்தித்து தான் மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இந்த தேர்தலில் நாம் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒன்று பெண்கள் 100 சதவீத வாக்களிக்க வேண்டும். என்ன வேலை இருந்தாலும் இன்று ஒரு நாள் என்னுடைய நாள், நான் வாக்களித்தே ஆவேன் என்று அனைத்து பெண்களும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும்.

இரண்டாவது உங்கள் குடும்பத்தாருக்கும் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு தாயால்தான் நல்ல விஷயங்களை குடும்பத்தில் எடுத்துச் சொல்ல முடியும். எவ்வளவு நாள் தான் நம்மை சுரண்டுபவர்களுக்கு வாக்களிப்பது.

அடுத்ததாக ஒவ்வொருவரும் வாழ்க்கையில் டார்ச் லைட்டை எடுத்து பாருங்கள். நல்லது எங்கே இருக்கும் என்று தெரியும். எனவே கண்டிப்பாக நீங்கள் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்று ஸ்ரீப்ரியா கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version