தமிழ்நாடு

எனக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி: கமல்ஹாசன் பேட்டி

Published

on

டெல்லியில் நடைபெற்ற சினிமா சீர்திருத்த சட்டம் குறித்த கூட்டம் ஒன்றுக்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்ததை அடுத்து அந்த அழைப்பை விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு சமீபத்தில் புதிய சினிமா திருத்தச் சட்டத்தை கொண்டு வர முடிவு செய்து உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திரையுலகினர் உள்பட முக்கிய பிரபலங்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற பிரபலங்களின் கருத்து கேட்புக் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு வந்தது. இந்த அழைப்பை ஏற்று கமலஹாசன் டெல்லி சென்றிருந்தார். கமல்ஹாசன் டெல்லி சென்றிருந்த போது அவரை எம்பிக்கள் சசிதரூர், கார்த்திக் சிதம்பரம், தமிழச்சி தங்க பாண்டியன் உள்பட பலர் சந்தித்தனர் என்பதும், அவர்களுடன் கமல்ஹாசன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் ’டெல்லியில் சினிமா திருத்த சட்டம் குறித்து வெளியே சொல்ல தனக்கு அனுமதி இல்லை என்று கூறினார். மேலும் என்னுடைய கருத்து என்னவாக இருக்கும் என தெரிந்தும் கருத்து தெரிவிக்க எனக்கு அழைப்பு விடுத்த மத்திய அரசுக்கு நன்றி என்றும் கூறியுள்ளார்

மேலும் உள்ளாட்சி தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் தயாராகி வருகிறது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்.

Trending

Exit mobile version