சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் அடுத்த படத்தின் பட்ஜெட்டே ரூ.500 கோடி: லைகா முன்வருகிறதா?

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விட்டது.

கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் படம் ஏற்கனவே ஒருசில காட்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் இந்த படத்தைதான் அடுத்ததாக அவர் தூசுதட்டப் போகிறார் என்று தெரிய வருகிறது .

இந்த படத்திற்கு இன்றைய நிலையில் 500 கோடி ரூபாய் பட்ஜெட் தேவை என்றும், இந்த படத்தை தயாரிக்க லைக்கா நிறுவனம் முன்வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்த ’இந்தியன் 2’ படம் பாதியில் நின்றுள்ள நிலையில் மீண்டும் கமல்ஹாசனின் அடுத்த படத்திற்கு முதலீடு செய்ய லைகா நிறுவனம் முன்வந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

தற்போது தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து கொண்டிருக்கும் நிலையில் தமிழில் ஒரு திரைப்படம் கூட ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்யவில்லை என்ற குறையை மருதநாயகம் போக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

seithichurul

Trending

Exit mobile version