தமிழ்நாடு

கமல்ஹாசன் வருகையால் பிரச்சனைக்குள்ளான தரமணி பகுதி: பெரும் பரபரப்பு!

Published

on

கமலஹாசன் இன்று சென்னை தரமணி பகுதியில் வெள்ளப் பகுதியை ஆய்வு செய்ய வருவதாக இருந்த நிலையில் அந்த பகுதியில் மின் மோட்டார்கள் மிரட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக வெள்ளநீர் ஆங்காங்கே தேங்கி உள்ள நிலையில் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக மின் மோட்டார்கள் மூலம் தேங்கியுள்ள வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை தரமணியில் உள்ள தேங்கியிருந்த நீர் மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றப்பட்ட வந்தது. இந்த நிலையில் திடீரென அங்கு வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் கமல்ஹாசன் இந்த பகுதிக்கு ஆய்வு செய்ய வருவதால் மின் மோட்டார்களை இயக்க வேண்டாம் என்றும் அவர் வந்து ஆய்வு செய்த பின்னர் மின் மோட்டார்களை இயக்கலாம் என்றும் அதிகாரிகளை மிரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ அசன் மவுலானாசம்பவ இடத்திற்கு வந்து யாரை கேட்டு மின்மோட்டார் இயக்குவதை நிறுத்தினீர்கள் என அதிகாரிகளிடம் கூறியதோடு உடனடியாக மின் மோட்டாரை இயக்க முடியும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கமலஹாசன் இந்த பகுதியில் ஆய்வு செய்ய வந்தபோது, ‘இங்கே மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் மின்மோட்டாரை நிறுத்தியதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை எங்கள் கட்சியினர் மோட்டாரை நிறுத்தி வைத்து இருந்தால் அது தவறுதான். அப்படி செய்திருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

Trending

Exit mobile version