சினிமா செய்திகள்

’விக்ரம்’ படத்தின் சாட்டிலைட், டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நிறுவனம்: எத்தனை கோடி தெரியுமா?

Published

on

கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விஜய் டிவி மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

’விக்ரம்’ படத்தின் மலையாள டிஜிட்டல் உரிமையை மட்டும் ஆசியாநெட் பெற்றுள்ளது என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகியவற்றின் டிஜிட்டல் உரிமைகளை ஸ்டார் நிறுவனம் பெற்று உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் டிஜிட்டல் உரிமையை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைக்காக மட்டும் ஸ்டார் நிறுவனம் ரூபாய் 110 கோடி கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கமல்ஹாசன் படத்திலேயே சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை மிக அதிக விலையில் வியாபாரம் செய்யப்பட்ட படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த தகவல் திரையுலக வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது

 

 

seithichurul

Trending

Exit mobile version