சினிமா செய்திகள்
’விக்ரம்’ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு: கமல் ரசிகர்கள் குஷி!
கமல்ஹாசன் நடிக்க உள்ள ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று செய்தி வெளியான நிலையில் நாளை இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் இதில் கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மாலை 5 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவித்துள்ளார்.
இதனை அடுத்து கமல்ஹாசன் மற்றும் விஜய் விஜய் சேதுபதி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கமல்ஹாசன் ஹீரோவாகவும் விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் ஆகிய நான்கு பிரபல நடிகர்கள் வில்லனாகவும் ’விக்ரம்’ படத்தில் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்காக ஏற்கனவே இரண்டு பாடல்கள் பதிவு செய்துவிட்டதாகவும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மூவருமே பிரபல நாயகிகள் என்றும் கூறப்படுகிறது.
Vikram first look from tomorrow evening at 5pm ????#Vikram #arambichitom
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) July 9, 2021