சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: காப்பி என ரசிகர்கள் கமெண்ட்ஸ்

Published

on

கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து இருந்தார் என்பதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் லோகேஷ் கனகராஜ், ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று வித்தியாசமான கோணங்களில் கமல்ஹாசன் அடர்ந்த தாடி மற்றும் மீசையுடன் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த போஸ்டர் அப்படியே விருமாண்டி படத்தின் காப்பி என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். விருமாண்டி படத்தில் நெப்போலியன், கமல்ஹாசன், பசுபதி ஆகிய மூவரும் இருக்கும் போஸ்டரை ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஞாபகப்படுத்துவதாக ரசிகர்கள் கிண்டலுடன் கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி உள்பட நான்கு வில்லன்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகிய இருவரும் நடிக்க உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நரேன் மற்றும் அர்ஜுன் தாஸ் நடிப்பது குறித்து அறிவிப்பு இனிமேல்தான் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த படத்தை முடித்துவிட்டு அதன்பின்னர் கமல்ஹாசன் பாபநாசம் படத்தில் நடிக்க செல்வார் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சரியாக திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களில் படத்தை முடிப்பார் என்பதால் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் ரிலீஸாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version