சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ ஆக்சன் டீசர்!

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் நேற்று இந்த படத்தின் அட்டகாசமான ஸ்டில் ஒன்று வெளியானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் ‘விக்ரம்’ படத்தின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அட்டகாசமான ஆக்ஷன் காட்சிகள் இருக்கும் இந்த வீடியோவில் கமல்ஹாசன் மற்றும் வில்லன் கோஷ்டி மோதல் துப்பாக்கி சண்டை காட்சிகள் அதிரடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் நடித்து தயாரிக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்பதும் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் இந்த படம் வரும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை கமல்ஹாசன் பிறந்தநாள் கொண்டாட இருக்கும் நிலையில் அவரது ரசிகர்களுக்கு இந்த வீடியோ மிகச்சிறந்த பிறந்தநாள் விருந்தாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

VIKRAM - The First Glance | #KamalHaasan232 | Kamal Haasan | Lokesh Kanagaraj | Anirudh Ravichander

author avatar
seithichurul

Trending

Exit mobile version