சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’: டிரைலர், பாடல்கள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published

on

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் மூன்றாம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடந்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்ரம் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

மே 15ஆம் தேதி இந்தப் படத்திற்காக அனிருத் கம்போஸ் செய்த பாடல்கள் ரிலீஸ் ஆகும் என்றும் அதே போல் ‘விக்ரம்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version