தமிழ்நாடு

உதட்டுக்கு மட்டுமே சேவை செய்பவர் கமல்ஹாசன்: வானதி ஸ்ரீனிவாசன்

Published

on

நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார் என்பதும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த தொகுதியில் இரண்டு வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய வந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, கமல்ஹாசன் மற்றும் வானதி ஸ்ரீநிவாசன் ஆகிய இருவரும் நேருக்கு நேர் விவாதம் செய்ய வேண்டும் என்றும் அப்போது தான் யார் திறமையானவர்கள் என்பது தெரியவரும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்து இருந்த மக்கள் நீதி மய்யம், வானதி ஸ்ரீனிவாசன் போன்ற துக்கடா அரசியல்வாதிகளுடன் எங்கள் தலைவர் விவாதம் செய்ய மாட்டார் என்றும் பிரதமருடன் விவாதம் செய்ய அவர் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் தன்னை துக்கடா அரசியல்வாதி என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்த வானதி சீனிவாசன் தற்போது தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் கமல்ஹாசன் அவர்கள் லிப்ட் சர்வீஸ் மட்டுமே செய்வார் என்று குறிப்பிட்டுள்ளார். லிப்ட் சர்வீஸ் என்றால் இரண்டு விதமாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், உதட்டளவில் சேவை செய்வது மற்றும் உதட்டுக்கு மட்டுமே சேவை செய்வது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமலஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version