தமிழ்நாடு

ஆணவத்தின் உச்சம்: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத அதிகரிகளுக்கு குவியும் கண்டனங்கள்!

Published

on

நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இது குறித்து தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ் தாய் வாழ்த்து பாடலை மாநில பாடலாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும் எனவே தமிழ் தாய் வாழ்த்து அரசு விழாவில் பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் சமீபத்தில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அரசு நிகழ்ச்சி நடந்தபோது இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் சிலர் தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் இருந்ததோடு நீதிமன்றம் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று கூறியதாகவும் விளக்கம் அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து கண்டனம் தெரிவித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பதாவது: தமிழ் தாய் வாழ்த்து பாடப்படும் போது எழுந்து நிற்க மறுப்பது விதி மீறல் மட்டுமல்ல மாநிலத்தில் தாய்மொழியை அவமதிப்பது ஆகும் என்றும், நிகழ்ந்த சம்பவம் இனிமேல் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழுக்கு தலை வணங்கு.

அதேபோல் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறியபோது, ‘தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்க முடியாது என்பது ஆணவத்தின் உச்சம் என்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்துடன் இன்று காலை 11 மணி அளவில் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்காத அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version