தமிழ்நாடு

திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது, அதிமுகவும் திமுகவும் ஒன்றுதான்: கமல்ஹாசன் ஆவேசம்!

Published

on

திமுகவின் சாயம் வெளுத்து விட்டது என்றும் அதிமுகவும் திமுகவும் இந்த விஷயத்தில் ஒன்றுதான் என்றும் கமலஹாசன் தனது ட்விட்டரில் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

கிராம சபை கூட்டம் குறித்து அவ்வப்போது கமல்ஹாசன் பேசி வருவார் என்பதும் அந்த கூட்டங்களை ஒவ்வொரு முறையும் தவறாமல் நடத்த வேண்டும் என்பதில் கமலஹாசன் வலியுறுத்தி வருவார் என்பதும் தெரிந்ததே

கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கிராம சபை கூட்டம் குறித்து போட்டியாளர்களிடமும் மக்களிடமும் அவர் பேசினார் என்பது தெரிந்ததே. மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கிராம சபை கூட்டம் நடத்துவது போன்ற ஒரு காட்சியையும் அவர் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவுக்கு அவர் கிராம சபையின் மீது நம்பிக்கை வைத்துள்ளார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி கிராம சபை கூட்டம் நடத்த அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு தனது கண்டனத்தை கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரானாவில் தேர்தல் நடக்கும், வாக்கு எண்ணிக்கை நடக்கும், பதவி ஏற்பு விழா நடக்கும், சட்டமன்றம் நடக்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகள் நடக்கும். ஆனால், கிராம சபை மட்டும் நடக்காது.

அதிமுகவிற்கும், திமுகவிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. முந்தைய ஆட்சியில் கிராம சபை நடத்த தொடுத்த வழக்கை திமுக ரகசியமாக வாபஸ் பெற்றுக் கொண்டபோதே இந்த அரசும் கிராம சபைகளைக் கண்டு அஞ்சுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். திமுகவின் சாயம் வெளுத்துவிட்டது.

seithichurul

Trending

Exit mobile version