தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை தவிர வேறு ஆலையே இல்லையா? கமல்ஹாசன் ஆவேசம்

Published

on

ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை தவிர வேறு ஆலையே தமிழகத்தில் இல்லையா? என கமலஹாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பின்னர் தமிழக அரசு முடிவெடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு திமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஒப்புக்கொண்டன. இந்த நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி மட்டும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து கமல்ஹாசன் கூறியபோது ’ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய திறக்க அனுமதித்தது தவறு என்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேறு ஆலையே இல்லையா? என்றும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் இந்த நேரத்தில் இன்னொரு போராட்டத்திற்கான விதையை தூவும் வழியை தமிழக அரசு ஏற்படுத்தி விடக்கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ஆக்சிஜன் தயாரிப்பதற்கு எத்தனையோ ஆலைகள் இருக்கும்போது ஸ்டெர்லைட் ஆலையை மட்டும் குறிப்பாக திறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்பது ஏன் என்ற கேள்வியை நெட்டிசன்களும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் மருத்துவத்திற்கு பயன்படாது என்று கூறப்படும் நிலையில் அந்த ஆலையை திறப்பது அவசியமா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version