தமிழ்நாடு

இதெல்லாம் ஒரு நாடா? நெஞ்சு கொதிக்கும் கமல்ஹாசன்!

Published

on

ஒரு பக்கம் நீட் தேர்வை தலைகீழாக நின்றாலும் நிறுத்த முடியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சூளுரைத்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டத்தில் முதல்வர் முக ஸ்டாலின் வெல்வார் என்று திமுகவினர் கூறிவருகின்றனர்
நீட்தேர்வு இருக்குமா? இருக்காதா? அந்த தேர்வுக்கு தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்ற குழப்ப நிலையை மாணவர்கள் மத்தியில் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதே கல்வியாளர்களின் வருத்தமாக உள்ளது

நீட் தேர்வு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து இந்த தேர்வில் இருந்து ஒரு மாநிலம் விலக்கு பெற முடியாது என்றும் அதற்கு சாத்தியமே இல்லை என்றும் சட்ட வல்லுநர்கள் கூறி வருகின்றனர். அப்படி இருந்தும் முந்தைய அதிமுக அரசும், தற்போதைய திமுக அரசு சட்டசபையில் தீர்மானம் இயற்றி அதை சாத்தியப்படுவது போல் மாணவர்களுக்கு காண்பித்து வருவது ஆசையை தூண்டி விடுவது போல் இருப்பதாக கல்வியாளர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

இந்த நிலையில் நீட் தேர்வு விஷயத்தில் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் அரசியல் செய்து வருவதாக ஏற்கனவே கூறிவரும் கமல்ஹாசன் அவர்கள் இது குறித்து தனது காட்டமான டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜெய்ப்பூரில் 35 லட்சம் ரூபாய்க்கு நீட் தேர்வின் வினாத்தாள்கள் வினியோகமாகிக் கொண்டிருக்க இங்கே தனுஷ், கனிமொழி போன்ற அப்பாவி மாணவர்கள் தங்கள் இன்னுயிரை நீத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு, இந்த வணிக நாடகத்தை அரங்கேற்ற ஒரு அரசு.சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்!

முன்னதாக நேற்று முன்தினம் நீட் தேர்வு நடைபெற்ற போதும் இதே போன்று ஒரு ஆவேசமான பதிவு செய்திருந்தார் என்பதும் அந்த டுவிட்டில் அவர், ‘ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?! என தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version