சினிமா செய்திகள்

’விக்ரம்’ படப்பிடிப்பு ஆரம்பம்: முதல் நாளில் கமல் vs விஜய்சேதுபதி காட்சிகள்

Published

on

கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இன்றைய படப்பிடிப்பில் கமலஹாசன், விஜய் சேதுபதி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் காட்சியை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகிய மூன்று வில்லன்கள் நடிப்பதாகவும், இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி 20 நாட்கள் சென்னையில் நடைபெற உள்ளதாகவும் இதனை அடுத்து ஆகஸ்ட் இறுதியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்கும் என்றும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பதும், இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கமலஹாசன் அடுத்ததாக ‘பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்னர் நீதிமன்ற வழக்குகள் நிறைவடைந்தால் ’இந்தியன் 2’படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version