தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் அனுமதி!

Published

on

உலகநாயகன் கமலஹாசன் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சற்று முன்னர் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இருதயம் சம்பந்தமான சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியானது

ஆனால் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா ஏற்பட்டுள்ள பாதிப்பு உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவு செய்து உள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
இதுகுறித்து கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்’ என்று கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version