தமிழ்நாடு

காலில் சர்ஜரி… தேர்தல் பிரச்சாரத்திற்கு எண்ட் கார்டு போட்ட கமல்… பரபரப்பான அறிக்கை வெளியீடு!

Published

on

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்குத் தற்காலிக முடக்குப் போட்டுள்ளார். அதற்கு அவர் என்ன காரணம் என்பது குறித்தும் விளக்கியுள்ளார்.

கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

‘தமிழகத்தை தலை நிமிரச் செய்ய ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் பூர்ச்சி செய்திருக்கிறேன். ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கீலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். மாற்றத்திற்கான மக்கள் எழுச்சியை கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன்.

அது போலவே, கொரோனா பொது முடக்கத்தின் போது துவங்கிய பிக்பாஸ் – சீசன் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றி கரமாக முடித்திருக்கின்றேன். இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட விபத்தில் காலில் ஒரு அறுவைச் சிசிக்கை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் சேவைகளும் தொடர்ந்தன.

Kamal Haasan

காலில் மேலும் ஒரு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

கமலின் முழு அறிக்கை:

 

Trending

Exit mobile version