சினிமா செய்திகள்

‘ஆப்பரேஷன் சக்சஸ்… அப்பா நலமுடன் இருக்கிறார்’- ஸ்ருதிஹாசன் நன்றி..!

Published

on

நடிகர் கமல்ஹாசனின் ஆப்பரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து உள்ளதாக அவரது மகள்கள் ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா அப்டேட் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னர் ஒரு முறை நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் ஒரு ஆப்பரேஷன் செய்யப்பட்டது. அதனது தொடர்ச்சியாக ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டி இருந்தது. ஆனால், தொடர்ச்சியாக பல வேலைகள், கட்சிப் பணிகள், டிவி மற்றும் பட ஒப்பந்தங்கள் என வரிசையாக பிஸியாகவே இருந்துள்ளார் கமல். இதனால் தொடர்ந்து ஆப்பரேஷன் ஒத்தி வைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது.

இந்த சூழலில் தற்போது சென்னை போருர் ராமச்சந்திரா மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்து கொள்வதற்காக கமல் அனுமதிக்கப்பட்டார். தற்போது ஆப்பரேஷன் வெற்றிகரமாக நிறைவடைந்து தங்களது அப்பா மிகவும் நலமுடன் இருப்பதாககமலின் மகள்கள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்‌ஷரா ஹாசன் ஆகிய இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆப்பரேஷன் முடிந்த போதும் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து கமல் மருத்துவமனையிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே ஓய்வு எடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version