தமிழ்நாடு

நேரடி விவாதத்திற்கு தயாரா? கமல்ஹாசனுக்கு சவால் விடுத்த அமைச்சர் ஸ்மிரிதி இரானி

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் நேரடி விவாதத்திற்கு தயாரா என மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி அழைப்பு விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கமல்ஹாசன் முதல் முதலாக போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியாளர் போட்டியிட்டாலும் அவர் யார் என்பதை இன்னும் பலருக்கு தெரியாததால் அவர் போட்டியிலேயே இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடியாக விவாதத்தில் ஈடுபட வேண்டும் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி ’மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் உடன் நேரடி விவாதம் இதில் பங்கேற்க வேண்டும் என்றும், கொள்கைகள், தீர்வுகள் மற்றும் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதித்தால் தான் யாருக்கு ஆட்சித் திறன் உள்ளது என்று தெரியவரும்’ என்று கூறினார் .இந்த சவாலை ஏற்று கமல்ஹாசன் விவாதத்துக்கு தயாராவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version