தமிழ்நாடு

சூப்பர்.. நல்ல பிளான்.. இதுதான் கமலின் பலம்.. சரியாக திட்டமிட்டு செயல்படும் மநீம!

Published

on

சென்னை: தமிழக அரசியலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தன்னை மிக முக்கியமான நபராக முன்நிறுத்தி கொள்ளும் காலம் கனிந்து இருக்கிறது. இந்த லோக்சபா தேர்தல் அவருக்கு தவிர்க்க முடியாத மாற்றத்தை அளிக்கும் தேர்தலாக இருக்க போகிறது.

நடிகர் கமல்ஹாசன் இப்போது முழு அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். ஒரு வருடம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியை அவர் தொடங்கிய போது, யாரும் அவர் இவ்வளவு உயரத்திற்கு வளர்வார் என்று நினைக்கவில்லை.

நேற்று திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் இருந்து தனக்கும் அரசியல் செய்ய தெரியும், தனக்கு அரசியல் அரங்கில் கூட்டம் கூடும் என்பதை கமல்ஹாசன் நிரூபித்துள்ளார்.

நேற்று மக்கள் நீதி மய்யம் சார்பாக நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியது அவரது அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான பேச்சாகும். முதலில் எப்போதும் போல மிகவும் சாதாரணமாக பேச்சை தொடங்கியவர், செல்ல செல்ல அடித்து ஆடினார். எப்போதும் போல இல்லாமல் புதிய ஸ்டைலில் பேசிய அவர் மக்களை பெரிய அளவில் கவர்ந்தார்.

அவர் தமிழகம், தேசியம் ஆகிய இரண்டில் உள்ள கட்சிகளையும் விமர்சனம் செய்தார். எல்லா கட்சிகளையும் விமர்சனம் செய்து தன்னை தனிப்பட்டவர் என்று காட்டிக்கொண்டார். அதோடு, அவர்களிடம் இல்லாத பல தகுதிகள் தன்னிடம் இருக்கிறது என்று அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தினார். வார்த்தைக்கு வார்த்தை தன்னை மற்றவர்களிடம் இருந்து பிரித்து பேசினார்.

seithichurul

Trending

Exit mobile version