தமிழ்நாடு

அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தை ஒரு வரி விடாமல் காப்பியடித்த கமல்!

Published

on

அமெரிக்காவின் மையவாத கட்சியின் கொள்கையை ஒரு வரி விடாமல் கமல் காப்பியடித்துள்ளதாக விடுதலை சிறுத்தை கட்சியின் எம்பி ரவிக்குமார் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கமலின் தேர்தல் பிரச்சாரம் குறித்து விமர்சித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

‘கட்சி கொள்கையை வெளியே சொன்னால் காப்பி அடித்துவிடுவார்கள் என கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் இணைய தளத்தில் மய்யவாதம் ( centrism) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டிருப்பவை அமெரிக்காவில் செயல்படும் அரசியல் கட்சியான The Centrist Party இன் கொள்கைகள் எனக் குறிபிடப்பட்டிருப்பவற்றின் அப்பட்டமான காப்பி.

The Centrist Party இன் இணைய தளத்திலிருந்து வரிக்கு வரி கட் அண்ட் பேஸ்ட் செய்திருக்கிறது மக்கள் நீதி மய்யம். Salient points about centrism from the CP perspective என்ற தலைப்பின்கீழ் தரப்பட்டிருக்கும் 3 பாய்ண்ட்டுகளையும் அப்படியே காப்பி எடுத்து centrism என்ற தலைப்பின்கீழ் தனது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறது கமல் கட்சி.
இப்படி காப்பி அடிப்பதற்கு தனக்கு மட்டுமே ‘ரைட்’ இருக்கிறது. அதுதான் ‘காப்பிரைட்’ என கமல் நினைத்துக்கொண்டிருக்கிறாரா?’

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version