தமிழ்நாடு

‘இந்த தாடியா… அந்த தாடியா…’- மோடிக்கு செக் வைத்த கமல்

Published

on

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து சவால் விடும் தொனியில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார்.

தான் போட்டியிடும் கோவை தொகுதியிலும், மற்றும் தமிழகத்தின் பிற தொகுதிகளிலும் தொடர்ந்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் கமல்.

இந்நிலையில் திருச்சியில் நடந்த மய்யம் பிரச்சாரக் கூட்டத்தில் கமல் பேசியதாவது:-

என்னை எதிர்க்கிறவங்க சொல்றாங்க. பாருங்க கமல் ஹெலிகாப்டர்ல வராரு. அது பாஜக கொடுத்ததுதான் என்கின்றனர். கொஞ்சமாவது நியாயம் வேண்டாமா. நான் மேடைக்கு மேடை அவர்களை திட்டிக் கொண்டிருக்கிறேன். அவர்களுடன் நான் எப்படி கூட்டு வைத்துக் கொள்ள முடியுங்கிறேன்.

பாஜக எதாவது ஒரு தொகுதியலாவது ஜெயிச்சு வந்திடலாம்னுதான் கோவையில வலுவான ஆள நிறுத்தியிருக்காங்க. ஆனா, அவங்களுக்கு எதிரா நான் அங்க நிக்குறேன். என்னோட பாஜக எதிர்ப்பு இதுதான்.

அந்த அம்மா கேட்டாங்கல, இந்த லேடியா அந்த மோடியான்னு… அந்த மாதிரிதான் இந்த தாடியா, அந்த தாடியான்னு நான் கேட்பேன்.

இவ்வாறு அதிரடியாக பேசினார் கமல்.

 

 

Trending

Exit mobile version