தமிழ்நாடு

மே 2ஆம் தேதிக்கு பின் கமல் பிக்பாஸ் சென்றுவிடுவார்: வானதி பேச்சுக்கு கமல் பதிலடி

Published

on

மே 2ஆம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படம் நடிக்கச் சென்று விடுவார் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியதற்கு கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 66 வயதாகிறது என்றும், எம்ஜிஆர் கூட மூன்றாவது அணியாக தான் அரசியலுக்கு வந்ததாகவும் எம்ஜிஆர் போலவே தானும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று அதே தொகுதியில் போட்டியிடும் பாஜகவின் வானதி ஸ்ரீனிவாசன் வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது ’மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவு வந்ததும் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சி அல்லது திரைப்படத்திற்கு நடிக்க சென்றுவிடுவார் என்று கூறினார்.

இது குறித்து கமல்ஹாசன் பதிலளித்து கூறுகையில் ’எங்களுக்கு அரசியல் என்பது தொழில் அல்ல, கடமை என்றும் நடிப்புதான் எனக்கு தொழில் என்றும், அதனால் நான் நடிக்க சென்று விடுவேன் என்று கூறியது சரிதான் என்றும் அவர் கூறியுள்ளார். வானதி ஸ்ரீனிவாசனுக்கு கமலஹாசன் பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version