தமிழ்நாடு

கோவை தெற்கு தொகுதி: பாஜக ஸ்டைலில் தேசிய பிரபலங்களை களமிறக்க கமல் திட்டம்?

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஐபியின் தொகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி தொகுதி, திமுக தலைவர் முக ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி, உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதி, குஷ்பு போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதி ஆகியவை குறிப்பிடலாம்.

அந்த வகையில் விஐபி தொகுதிகளில் ஒன்று கோவை தெற்கு. இந்த தொகுதியில் கமல்ஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இரண்டு பிரபலங்கள் நேருக்கு நேர் மோதுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளர் இருக்கும் இடமே தெரியவில்லை என்பதால் கமல் – வானதி ஸ்ரீனிவாசன் இடையேதான் கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய தேசிய தலைவர்கள் கோவைக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட முக்கிய தலைவர்கள் கோவைக்கு பிரசாரம் செய்ய உள்ளதாக புறப்படுகிறது.

இதனை அடுத்து கமல்ஹாசனும் பாஜக ஸ்டைலில் தேசிய தலைவர்களை களமிறக்க அதிரடியாக முடிவு செய்துள்ளார். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடைசி நாளில் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வார் என்றும், மம்தா பானர்ஜி மற்றும் பினராயி விஜயன் ஆகியோர்களையும் பிரச்சாரம் செய்ய கமல் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் மத்தியில் ஆளும் கட்சி என்பதால் வானதி சீனிவாசன் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக அந்த தொகுதியில் உள்ள அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Trending

Exit mobile version