சினிமா செய்திகள்
கமல்ஹாசன் – சிவகார்த்திகேயன் படத்திற்கு திடீர் சிக்கலா? டிராப் ஆகலாம் என தகவல்!
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப் படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாகவும் இந்த படம் டிராப் ஆகவும் வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
சிவகார்த்திகேயன் படங்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவில் மார்க்கெட் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டாக்டர் படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆனதால் அவருடைய மற்ற படங்களின் வியாபாரங்கள் மிகப்பெரிய அளவில் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக மட்டும் கொடுத்துவிட்டு படத்தை எடுத்து மிகப் பெரிய விலைக்கு விற்க கமல்ஹாசனின் ராஜ்கமல் திட்டமிட்டது/ ஆனால் சிவகார்த்திகேயனும் தனது எஸ்கே நிறுவனத்தின் மூலம் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை தயாரித்து கமல்ஹாசனுக்கு தருவதாக கூறியதாகவும் கமல்ஹாசன் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது .
இதனை அடுத்து இந்த படம் டிராப் ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும் இரு தரப்பினருக்கும் இடையே தற்போது சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சுவார்த்தையின் முடிவில் தான் இந்த படம் தொடருமா அல்லது டிராப் ஆகுமா என்பது முடிவு செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.