சினிமா செய்திகள்

கமல்ஹாசனை தேடி வந்த புதிய பதவி: விரைவில் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல்!

Published

on

உலகநாயகன் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு புதிய பதவி தேடி வந்துள்ளது. அந்த பதவியில் அவர் விரைவில் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டது என்பதும் இதில் பாண்டவர் அணி அமோக வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து நடிகர் சங்க தலைவராக நாசர், பொதுச் செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தி மற்றும் துணைத் தலைவராக கருணாஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர் .

இந்த நிலையில் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கமல்ஹாசனிடம் நடிகர் சங்க உறுப்பினர்கள் கோரிக்கை வைத்ததாகவும் இந்த கோரிக்கையை கமல்ஹாசன் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது .

விரைவில் ஒரு நாளில் நடிகர் சங்க அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் பதவியை கமல்ஹாசன் ஏற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version