பங்கு சந்தை

மார்ச் 16-ம் தேதி பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடும் கல்யாண் ஜூவல்லர்ஸ்!

Published

on

தென் இந்தியாவின் மிகப் பெரிய நகைக் கடை நிறுவனமான கல்யாண் ஜூவல்லர்ஸ், மார்ச் 16-ம் தேதி பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிடுகிறது.

கல்யாண் ஜூவல்லர்ஸின் பங்குகளின் ஆரம்ப விலை 86-87 ரூபாய்க்குள் இருக்கும். மொத்தம் 1,175 கோடி ரூபாயை ஐபிஓ மூலம் கல்யாண் ஜூவல்லர்ஸ் திரட்ட திட்டமிட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 172 பங்குகள் ஒரு லாட் என வாங்க வேண்டும். அதிகபட்சம் 13 லாட் என 2236 பங்குகளை வாங்க முடியும்.

மார்ச் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையில் கல்யாண்ஜூவல்லர்ஸ் பங்குகளை ஐபிஓ மூலம் வாங்க முடியும். மார்ச் 23-ம் தேதி பங்குகள் அலாட்மெண்ட் செய்யப்படும். பங்குகள் அலாட் ஆகவில்லை என்றால் மார்ச் 24-ம் தேதி பணம் திருப்பி அளிக்கப்படும். பங்குகள் டிமேட் கணக்கில் மார்ச் 25-ம் தேதி கிரெடிட் செய்யப்படும்.

பொது பங்குச்சந்தையில் மார்ச் 25-ம் தேதி பட்டியலிடப்படும். கயாண் ஜூவல்லரி நிறுவனத்தில் அதன் உரிமையாளர்களுக்கு 76 சதவீதம் பங்குகள் உள்ளது.

ஐபிஓ மூலம் திரட்டும் பணத்தை கல்யாண் ஜூவல்லர்ஸின் மூலதனம் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

1993-ம் ஆண்டு டி.எஸ்.கல்யாணராமன் என்பவரால் கல்யான் ஜூவல்லர்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. கல்யாண் ஜூவல்லர்ஸ்க்கு இப்போது இந்தியாவில், 21 மாநிலங்களில் 107 கிளைகளும், மத்திய கிழக்கு நாடுகளில் 30 ஷூ ரூம்களும் உள்ளன.

seithichurul

Trending

Exit mobile version