தமிழ்நாடு

வைகை ஆற்றில் அழகர்: கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பரிதாப பலி!

Published

on

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இன்று இறங்கிய வைபவம் மிகச் சிறப்பாக நடந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியதை லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அழகர் வைகை ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடியிருந்தனர்.

இந்த நிலையில் கூட்ட நெரிசலில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் சிக்கி உயிரிழந்ததாகவும், மேலும் 5 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைகையாற்றில் ஒரே நேரத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை பார்ப்பதற்காக 10 லட்சத்திற்கும் பெற்றோர் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி இந்த பரிதாபமான சம்பவம் நிகழ்ந்து உள்ளதாகவும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Trending

Exit mobile version