சினிமா

மீடூவுக்கு இப்படியொரு வேட்டு வைத்த கல்கி!

Published

on

பாலிவுட்டின் போல்டான நடிகை கல்கி கோச்லின், சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சி செய்வது போல, அந்தரங்க காட்சிகள் எடுக்கும் முன்னதாக ஏன் பயிற்சி கொடுக்கக் கூடாது என கேள்வி எழுப்பி பாலிவுட்டையே அதிரவைத்துள்ளார்.

பாலிவுட் நடிகை கல்கி கோச்சலின், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சண்டைக் காட்சியின் போது ஹீரோவின் முகத்தில் அடி விழுந்து விடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஒத்திகைகள் பார்க்கின்றனர். அதே போல, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதற்கு முன்னர், அந்த இரு நடிகர்களுக்கும் ஒத்திகை ஏன் தரக் கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

டாட்டா நிறுவனத்தின் இலக்கிய அமைப்பில் நன்னடத்தை பிரிவில் அங்கம் வகித்துள்ள கல்கி கோச்லின், இதுபோன்று பயிற்சி எடுத்து செய்வதால், அந்த நபர் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், தவறுதலாக யார் உதட்டையும் யாரும் கடித்து விட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். மேலும், மீ டூ போன்ற பிரச்சனைகளும் இதனால் தவிர்க்கப்படும் என்று கூறி பாலிவுட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version