சினிமா செய்திகள்

கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பது இந்த ஹீரோவா? ‘விக்ரம்’ படம் குறித்த ஆச்சரிய தகவல்!

Published

on

கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்றும், முதல்கட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கமலஹாசன் மற்றும் பகத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், நரேன் உள்ளிட்ட பிரபலங்கள் இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு இளம் ஹீரோ இந்த படத்தில் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது. அவர்தான் பிரபல நடிகர் ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம்.

காளிதாஸ் ஜெயராம் இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிக்க இருப்பதாகவும் இவருடைய கேரக்டர் தான் படத்தின் திருப்புமுனை டைரக்டர் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனுக்கு மகனாக நடிப்பதில் தனக்கு மிகுந்த பெருமை என்றும் அவருடன் நடிக்கும் அனுபவத்தைத் பெற காத்திருப்பதாகவும் பேட்டி ஒன்றில் காளிதாஸ் ஜெயராம் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் லோகேஷ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் படத்தை முடித்துவிட்டு கமல்ஹாசன் ’பாபநாசம்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதனை அடுத்து இந்தியன்-2 படத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Trending

Exit mobile version