Connect with us

விமர்சனம்

எப்படி இந்தக் கதையெல்லாம் ஓகே பண்றீங்க… களத்தில் சந்திப்போம் விமர்சனம்…

Published

on

கோ படத்திற்கு பின் பல நூற்றாண்டாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க நினைத்த ஜீவாவுக்கு ஜிப்ஸி-யும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. அருள் நிதிக்கும் கடந்த இரண்டு ஆண்டாக எந்த புதிய படமும் வெளியாகவில்லை. ஒரு காலத்தில் இந்த ரெண்டு பேரும் மிகவும் வித்யாசமான கதைகளையே தேடி தேடி நடித்து வந்தனர். இருவரும் சேர்ந்து ஒரு படம் என்றால் உண்மையிலேயே அந்த படம் எந்த அளவுக்கு வித்யாசமான கதையோடு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் வெளியாகி இருக்கிறது “களத்தில் சந்திப்போம்”.

என்னது களத்தில் சந்திப்போம் படம் பாத்துட்டீங்களா என உங்க மனசுல இருக்குற இது திகில் தியேட்டருக்குள்ள நுழைஞ்சதுமே எங்களுக்கும் வந்துடுச்சு. ஆமா தியேட்டரில் மொத்தமே 6 பேரு தான்.  சரி இதெல்லாம் இருக்கட்டும் கதை என்னன்னு சொல்லுயான்னு நீங்க கத்துறது எங்களுக்கு கேட்குது.

ரெண்டே ரெண்டு பாரா படிச்சுட்டு கத கேட்கும் உங்களைப் போலத்தான் ரெண்டு மணி நேரம் படம் பாத்த நாங்களும் கதை என்னன்னு தேடிட்டு இருக்கும். அத எப்படிச் சொல்றது. கதை இருந்துச்சா இல்லையான்னு சொல்றதா? இந்தப் படத்தை போலவே பெரிய குழப்பமா தான் இருக்கு.

 

சரி காரைக்குடியில் அப்புச்சி பைனான்ஸ் கம்பெனியில் வட்டி வசூல் செய்து கொடுத்துக்கொண்டு அப்போ அப்போ கபடி விளையாடிக்கொண்டு இருக்கும் இரண்டு நண்பர்கள் ஆனந்த், அசோக். அவர்களுக்குள் இருக்கும் தளபதி ரஜினி மம்முட்டி லெவல் நட்பும், அவர்களுக்கு நடக்கும் காதலும் கலந்த கலவை தான் இந்த களத்தில் சந்திப்போம் படம். (நாங்களாவது கதையை கண்டுபிடிச்சு சொல்லியிருக்கோமேன்னு சந்தோசப்படுங்க. இதுதான் கதையான்னு கேள்வி கேட்காதீங்க ஆமா.)

ஒரு படைப்பு என்பது உண்மையில் வாசகனிடம், பார்வையாளனிடம் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். என்னடா படைப்பு இது என்ற எரிச்சலையாவது உண்டாக்க வேண்டும். ஆனால், இந்தப் படம் பார்த்தபின் என்ன சொல்ல வாராங்க. எதுக்கு இந்தப் படத்தை எடுத்துருப்பாங்க. இந்தக் கதையை எப்படி சொல்லி ஜீவா, அருள்நிதிட்ட தேதி வாங்கியிருப்பாங்க. உண்மையிலேயே படம் நல்லா இருக்கா? இல்லையா? இப்படின்ற மிகப்பெரிய குழப்பம் இன்னும் மனசுல ஓடிட்டே இருக்கு.

கதை இல்லை என்று சொல்லியாச்சு. கமர்சியல் படத்திற்கு இது தேவையும் இல்லை. ஆனால், கமர்சியல் படத்தை உண்மையில் சுவாரஸ்யமாக்குவது அதன் திரைக்கதை தான். அதை சரியாக அமைத்துவிட்டால் செம்ம விரு விருப்பாக அமைந்துவிடும். அதுதான் வெற்றியான கமர்சியல் படத்திற்கான அடையாளமும் கூட. அதில் இயக்குநர் மிகப்பெரிய அளவில் சொத்தப்பியிருக்கிறார்

ரோபோ சங்கர், பால சரவணன் என இருந்தும் ஜீவா கொஞ்சம் காமெடி செய்ய முயன்றிருக்கிறார். எதுவுமே எடுபடவில்லை. என்பதுதான் மிகப்பெரிய சோகம்

காதலிக்க மட்டுமே கதாநாயகிகள் மஞ்சிமா மோகன், ப்ரியா பவானி சங்கர், பல நாட்களாக வேலராமமூர்த்தி, ராதா ரவி, இளவரசன் ஆகியோர் செய்யும் கதாபாத்திரங்களே இந்த படத்திலும் என்ற கமர்சியல் வரைமுறையில் இருந்து மாற முடியவில்லை.

Also Read: 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜோடி சேரும் சூர்யா- ஜோதிகா… கதை எழுதிய பெண் இயக்குநர்!

பிஜிஎம் மன்னன் என்று இதுவரை மட்டுமல்ல இனியும் யுவன் சங்கர் ராஜா எப்போவும் ராஜா தான். சண்டைக் காட்சியில் மாஸ் பிஜிஎம் போட்டு மிரட்டியுள்ள யுவன் காதல் காட்சிகள் உட்பட எந்த காட்சியிலும் யுவன் சங்கர் ராஜா பெரிய கவனம் செலுத்தவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கே உள்ளது. பாடல்களும் பெரிய அளவில் கவனம் பெறவில்லை. பழைய பன்னீர்செல்வமா மீண்டும் யுவனை எதிர்பார்த்து காத்திருக்கும் அவரது ரசிகர்களின் காத்திருப்பை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும்.

சினிமா துறையில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிகப்பெரிய செயல் என்று சொல்வார்கள். ஆனால், கிடைக்கும் வாய்ப்பை அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் போன்ற மிகப்பெரிய பேனரில் கிடைக்கும் வாய்ப்பை ஒருவர் எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதுவும் யுவன் இசை, ஜீவா, அருள்நிதி போன்ற அட்டகாசமான வித்யாசமான கதையை விரும்பும் நடிகர்கள் கூட்டணி அமைவது எல்லாம் சாதாராண விஷயமா என்ன.

இப்படியான ஒரு நல்ல வாய்ப்பை இயக்குநர் ராஜசேகர் வீணடித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை சொல்லி வாய்ப்பை எப்படி இந்த இயக்குநர் வாங்கினார் என்று தான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதும் தோன்றினால் சொல்லுங்கள்…

author avatar
seithichurul
வணிகம்2 மணி நேரங்கள் ago

ஜியோவின் புதிய OTT திட்டங்கள்: அதிரடி சலுகைகள்!

தமிழ்நாடு2 மணி நேரங்கள் ago

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியால் போக்குவரத்து மாற்றம்!

வேலைவாய்ப்பு2 மணி நேரங்கள் ago

அரசு வேலைக்கு தட்டச்சு பயிற்சி அவசியம்: தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி பகவானின் ஆசிர்வாதம்: கிச்சடி உணவின் ஆன்மீக முக்கியத்துவம்!

இந்தியா4 மணி நேரங்கள் ago

ஐபோன் விலையில் அதிரடி குறைப்பு!

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

BSNL-க்கு மாறி வருகிறார்கள்: ஜியோ, ஏர்டெல் கவலை!

சினிமா4 மணி நேரங்கள் ago

ராயன் படத்தின் முதல் நாள் வசூல் கலக்கு! ரூ.12 கோடிக்கும் மேல்!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.35,000/- சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

வேப்பிலை முதல் துளசி வரை: இயற்கையின் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டு மருந்துகள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024: உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? புதிய திட்டம் – என்.பி.எஸ். வாத்ஸல்யா