சினிமா செய்திகள்

கலர்ஃபுல்லான நட்பே துணை டிரைலர் ரிலீஸ்!

Published

on

மீசையை முறுக்கு வெற்றியை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நாயகனாக நடிக்கும் நட்பே துணை படத்தின் டிரைலர் நேற்று இரவு வெளியானது.

டிரைலர் வெளியான வெறும் 7 மணி நேரத்திலேயே 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது. மீசையை முறுக்கு படத்தை போலவே இந்த படத்திலும், யூடியூபர்கள் வரிசைக் கட்டி நடித்துள்ளனர்.

சுந்தர்.சி தயாரிப்பில் பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் உருவாகி உள்ள நட்பே துணை படத்தில் ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் தனது பணியை செய்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனகா தமிழில் அறிமுகம் ஆகியுள்ளார்.

மேலும், இந்த படத்தில் பாண்டியராஜன், கரு.பழனியப்பன், கெளசல்யா மற்றும் யூடியூப் பிரபலங்களான விக்னேஷ்காந்த், ராஜமோகன், எருமசாணி விஜய், சாரா, பிஜிலி ரமேஷ் என முதல் படத்தில் விட்டு போன மற்ற படையையும் தன்னுடன் சேர்ந்து ஹாக்கி ஆடியுள்ளார் ஹிப் ஹாப் ஆதி.

seithichurul

Trending

Exit mobile version