தமிழ்நாடு

தமிழக மாணவர்கள் சாதனை.. வெற்றிகரமாக ஏவப்பட்ட கலாம் சாட்!

Published

on

சென்னை: கலாம் சாட் என்ற உலகின் மிக குறைந்த எடை கொண்ட நானோ சாட்டிலைட்டை விண்ணில் ஏவி தமிழக மாணவர் குழு சாதனை படைத்து இருக்கிறது.

நேற்று கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது தற்போது திட்டமிட்டபடி சரியாக செயல்பட தொடங்கி இருக்கிறது.

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் மூலம் இந்த கலாம் சாட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதை உருவாக்கிய தமிழக மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 7 பேர் கொண்ட மாணவர்கள் குழுதான் இதை உருவாக்கியது. இவர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் ஆவார். இவர்கள் Space Kidz India என்ற குழுவை சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லோரும் தற்போது இளங்கலை படித்து வருகிறார்கள்.

இந்த குழுவிற்கு தமிழக மாணவர் ரிபாத் ஷாருக்தான் தலைவர். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் அருகே இருக்கும் பள்ளப்பட்டி. இவர்கள் குழு ஏற்கனவே நாசாவில் நடந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருக்கிறார்கள். நாசாவின் இண்டர்ன்ஷிப்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version