தமிழ்நாடு

மதுரையில் 10 ரூபாய்க்கு ’கலைஞர் தண்ணீர் பாட்டில்’: அரசு திட்டமா? தனியார் ஏற்பாடா?

Published

on

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள மக்கள் அனைவருமே குடிநீரை காசு கொடுத்து வாங்கும் வழக்கம் கொண்டுள்ளனர் என்பதும், ஒரு லிட்டர் பாட்டில் முதல் 30 லிட்டர் கேன் வரை வாங்கியே கிட்டத்தட்ட அனைவருமே குடிநீருக்கு பயன்படுத்தி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குடிநீரை விலைக்கு வாங்குவதன் மூலம் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு அரசு சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி கொண்டுவரப்பட்டது.

அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய அம்மா குடிநீர் திட்டத்தின்படி ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.10 என விற்பனை செய்யப்பட்டதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் உதவியாக இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின்னர் அம்மா குடிநீர் திட்டம் பெரிய அளவில் விரிவு படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் மதுரையில் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் மறைந்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் படத்துடன் குடிநீர் பாட்டில்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. அரசு திட்டமாக இல்லாமல் தனி நபர் ஒருவர் கலைஞர் குடிநீர் என்ற பெயரில் குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்வதாக தெரிகிறது, கருணாநிதியின் பெயரில் கொண்ட அன்பால் இந்த திட்டத்தை அவர் தொடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

முதலாவதாக மதுரையில் குடிநீர் விற்பனையை தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்வதற்கு அங்கீகாரம் பெற முயற்சி மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கலைஞர் குடிநீர் திட்டத்திற்கு மதுரை மக்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version