தமிழ்நாடு

சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம்: ரூ.39 கோடியில் அமைக்க முடிவு!

Published

on

சென்னை மெரினாவில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூபாய் 39 கோடிகள் ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் தற்போது அண்ணா நினைவிடத்தில் ஒரு பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகில் கலைஞருக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் புதிதாக ஒரு நினைவிடம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ரூபாய் 39 கோடி செலவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நினைவிடம் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும் என்றும் இந்த நினைவிடத்தில் கலைஞரின் அரும் பணிகளை போற்றும் விதமாக அவரின் வாழ்வில் சாதனைகள், சிந்தனைகளை இந்த தலைமுறையினர் அறியும் வகையில் விளக்கப்படங்களுடன் நினைவிடம் இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி இறந்த போது கலைஞர் நினைவிடம் அமைக்க அப்போதைய அதிமுக அரசு அனுமதி தரவில்லை. ஆனால் தற்போது திமுக ஆட்சி ஏற்பட்டுள்ளதை அடுத்து கலைஞர் நினைவிடம் அமைக்க முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் நினைவிடம் என தனியாக அமைக்கப்பட்டாலும் தற்போது அண்ணா நினைவிட வளாகத்தில் உள்ள கலைஞர் சமாதி தொடர்ந்து இருக்கும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version