சினிமா செய்திகள்
திருமணத்திற்கு பின் ரிலீஸாகும் காஜல் அகர்வாலின் முதல் படம்!
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், கௌதம் என்ற மும்பை தொழிலதிபரை கடந்த ஆண்டு அக்டோபர் 6-ஆம் தேதி திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின்னர் அவர் தனது கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் பிசியாக நடிகையாக தொடர்ந்து நடித்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் நடித்த திரைப்படம் ஒன்றின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 4 மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் டைட்டில் ’அனு அண்ட் அர்ஜுன்’ என்பதும் தெலுங்கு டைட்டில் மொசகாலு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் மார்ச் 19ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெப்ரி ஜி சின் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின்னர் காஜல் அகர்வால் நடித்த திரைப்படம் முதல் முதலாக வெளியாக உள்ளதால் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காஜல் அகர்வால் தற்போது ஹேய் சினாமிகா, ஆச்சார்யா, இந்தியன் 2, கோஸ்டி, பாரீஸ் பாரீஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்களும் விரைவில் ரிலீசாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.