சினிமா செய்திகள்

உதவி கேட்ட உடனே ஒரு லட்சம் அனுப்பிய காஜல் அகர்வால்: கல்லூரி மாணவி நெகிழ்ச்சி

Published

on

கல்லூரி மாணவி ஒருவர் நடிகை காஜல் அகர்வாலிடம் தனது கல்விக்காக உதவி கேட்ட ஒரு சில மணிநேரத்தில் ஒரு லட்ச ரூபாய் அனுப்பிய தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஐதராபாத் நகரை சேர்ந்த கல்லூரி மாணவி சுமா என்பவர் காஜலின் டுவிட்டரில் தனது கல்லூரி படிப்பிற்கு 83 ஆயிரம் வேண்டும் என்றும் தாங்கள் உதவி செய்ய முடியுமா என்றும் கேட்டுள்ளார். இதனை அடுத்து உடனடியாக அவரை தொடர்பு கொண்ட காஜல் அகர்வால் அவருடைய வங்கி விவரங்களைப் பெற்று அவரது வங்கி கணக்கில் ரூபாய் ஒரு லட்சம் அனுப்பி உள்ளார்.

தான் கேட்ட தொகையை விட அதிகமாக அனுப்பிய காஜல் அகர்வாலை நினைத்து அந்த மாணவி இன்ப அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இதுகுறித்து தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

கல்லூரி மாணவியின் கல்விக்காக உதவி செய்த காஜல் அகர்வால் குறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவி நடித்து வரும் ஆச்சார்யா உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருடைய இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

 

 

 

seithichurul

Trending

Exit mobile version