சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கரின் அடுத்த பட நாயகி இவர்தான்: புதிய தகவல்

Published

on

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த ’இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட கைவிடப்பட்ட நிலையில் ஷங்கர் தற்போது ராம்சரண் தேஜா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருந்தாலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகள் குறைவாகவே இருக்கும் என்றும் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் 6 மாதத்தில் முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராம்சரண் தேஜா ஜோடியாக இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கைரா அத்வானி தான் இந்த படத்தின் நாயகி என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஷங்கர் இந்த படத்தை முடித்துவிட்டு அன்னியன் படத்தின் இந்தி ரீமேக்கை இயக்க உள்ளார் இந்த படத்திலும் கைரா அத்வானி தான் ஹீரோயின் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் ஹீரோ ரன்பீர் சிங் என்பது தெரிந்ததே.

Trending

Exit mobile version