தமிழ்நாடு

பாமக வேட்பாளருக்கு எதிராக காடுவெட்டி குருவின் மனைவி போட்டி

Published

on

பாமகவின் முக்கிய தலைவராக இருந்த காடுவெட்டி குரு, கடந்த 2018 ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக காலமானார். அவரது மறைவுக்கு பின் காடுவெட்டி குருவின் மனைவி மற்றும் மகன் பாமகவுக்கு எதிராக செயல்பட்டனர் என்பதும் காடுவெட்டி குருவின் மகன் சமீபத்தில் திமுகவில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில் ஜெயங்கொண்டம் தொகுதியில் பாமக வேட்பாளராக பாலு என்பவரை போட்டியிட வைத்தது.

ஆனால் பாலுவுக்கு சீட் கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தொண்டர்கள் போராட்டம் செய்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டான் தொகுதியில் பாமக வேட்பாளர் பாலுவை எதிர்த்து மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் அவர் ஜெயங்கொண்டம் தொகுதியில் தேர்தலில் போட்டியிடுகிறார். காடுவெட்டி குருவின் மனைவி போட்டியிடுவதால் வன்னியர்கள் ஓட்டு இரண்டாகப் பிரிய வாய்ப்பிருப்பதாகவும் இதனால் பாமக வேட்பாளர் பாலு தோல்வி அடைய வாய்ப்பிருப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version