தமிழ்நாடு

மீண்டும் திருவள்ளுவருக்கு ‘காவி உடை’; சர்ச்சையைக் கிளப்பும் பாஜக!

Published

on

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படடும் நிலையில், பாஜகவினர் காவி உடை போட்ட திருவள்ளுவர் படத்தைப் பகிர்ந்து வாழ்த்துச் செய்தி பகிர்ந்து வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

திருவள்ளுவருக்கு, தமிழக அரசு ஏற்றுக் கொண்ட படத்தில் அவர் வெண்ணிற உடையை மட்டுமே போட்டிருப்பார். அவருக்கு எந்த மதச் சாயமும் பூசக் கூடாது என்பதற்காக பல கட்ட ஆய்வுக்குப் பின்னர், பொதுவாக பார்க்கும் திருவள்ளுவரின் படம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் அதைக் குலைக்கும் நோக்கில் பாஜக, கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி கூறியதாக, பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில், ‘போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.

அவரது லட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டு காவி உடை கொண்ட திருவள்ளுவரின் படத்தையும் பகிர்ந்துள்ளது.

இதைப் போல பாஜகவின் முக்கிய நிர்வாகியான முரளிதர் ராவ் உள்ளிட்டவர்களும் காவி உடை போட்ட திருவள்ளுவரின் புகைப்படத்தையே பகிர்ந்துள்ளனர். பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டேவும் காவி உடையுடைய திருவள்ளுவர் படத்தையே பகிர்ந்து வாழ்த்துச் செய்தி தெரிவித்துள்ளனர்.

Trending

Exit mobile version