சினிமா செய்திகள்

காதலுக்கு மரியாதை’ படத்தில் நடித்த நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

Published

on

விஜய் ஷாலினி நடித்த காதலுக்கு மரியாதை உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை காலமானதை அடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன் நடித்த நூறாவது படமான ராஜபார்வை என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை லலிதா. இவர் பிரபல இயக்குனர் பரதன் என்பவரின் மனைவி என்பதும் இயக்குனர் பரதன் தேவர்மகன் உள்பட ஒரு சில தமிழ் படங்களையும் பல மலையாள படங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் காதலுக்கு மரியாதை, சினேகிதியே, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, பரமசிவம், கிரீடம் உள்பட பல திரைப்படங்களில் நடிகை லலிதா நடித்துள்ளார். அவர் தற்போது ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகிவரும் ’வீட்ல விசேஷங்க’ மற்றும் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள மாமனிதன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நடிகை லலிதா நேற்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த லலிதாவுக்கு சித்தார்த், ஸ்ரீகுட்டி ஆகிய இரண்டு வாரிசுகள் உள்ளனர். இதில் சித்தார்த் மலையாளத் திரையுலகில் இயக்குனராகவும் நடிகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை லதாவின் கணவர் இயக்குனர் பரதன் கடந்த 1998ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version