தமிழ்நாடு

‘ஏம்பா டிடிவி தினகரா… ஆர்.கே.நகர்ல இருந்து எதுக்குப்பா ஓடிவந்த..?’- கடம்பூர் ராஜூவின் நறுக் கேள்வி

Published

on

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

களத்தில் மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது அமமுக – தேமுதிக கூட்டணி. இந்தக் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அமமுக பொதுச் செயலாளர், இந்த முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி ஆகும். 

அந்த தொகுதியில் தமிழக செய்தித் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான கடம்பூர் ராஜூவும் களமிறங்குகிறார். இத்தொகுதியில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி என்பதாலும், அமைச்சர் பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் கடம்பூர் ராஜூ, மீண்டும் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தினகரன், இன்னொரு தொகுதியிலும் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் கடம்பூர் ராஜூ, ‘நான் தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் கோவில்பட்டித் தொகுதியில் போட்டியிடுவேன். நான் கடந்த முறை போட்டியிட்ட தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடுகிறேன். அதே நேரத்தில் டிடிவி தினகரன், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால், தற்போது அங்கு நிற்காமல் கோவில்பட்டிக்கு வந்துவிட்டார். இப்படி தினகரன் ஓடிவரக் காரணம் என்ன?

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்றதிலிருந்து தொகுதி பக்கமே தலை காட்டாதவர் தினகரன். அவர் சட்டமன்றத்துக்கே மூன்று நாட்கள்தான் மொத்தத்தில் வந்திருப்பார். பின்னர் எப்படி தொகுதிப் பக்கம் போயிருப்பார்’ என்று கிண்டல் தொனியில் விமர்சித்துள்ளார். 

Trending

Exit mobile version