தமிழ்நாடு

சுயேட்சைகள் வெற்றி என அறிவிக்காமல் தேர்தலை ரத்து செய்த அதிகாரிகள்!

Published

on

தூத்துக்குடி மாவட்டம் கடலூர் நகராட்சியில் 3 வார்டுகளில் திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சுயேச்சைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படாமல், அந்த மூன்று மாவட்டங்களிலும் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சியில் போட்டியிட்ட மூன்று திமுக வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்பதை அடுத்து அந்த மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனையடுத்து அந்த தொகுதியில் போட்டியிட்ட மூன்று சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த மூன்று தொகுதிகளிலும் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடம்பூர் பேரூராட்சியில் தேர்தல் ஆணையத்தின் நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகள் மீறப்பட்டது என்றும் அதன் காரணமாக மூன்று வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த மூன்று வார்டுகளில் புதிய தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு தொகுதியில் வேட்பாளர் வாபஸ் பெற்றால் அல்லது வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் மீதி உள்ள வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வரும் நிலையில் கடம்பூர் நகராட்சியில் உள்ள 3 வார்டுகளில் மட்டும் அதே காரணத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது சுயேச்சை வேட்பாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version