உலகம்

காபூலில் இருந்து கிளம்பும் அனைத்து விமானங்களும் திடீர் ரத்து: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு பகுதியையும் தாலிபான்கள் தற்போது பிடித்து விட்டனர் என்பதும் தலைநகர் காபூல் உள்பட அனைத்து பகுதிகளும் தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கான் திடீரென நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டார் என்றும் கூறப்பட்டு வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் தாலிபான்கள் அரசு அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காபூலில் இருந்து மக்கள் பல்வேறு நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து ரயில்கள் போல விமானத்தில் ஏறுவதற்கு கட்டுக்கடங்காத கூட்டம் அடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காபூல் விமான நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து விமான நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து விமானங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் காபூலை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால் பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறப்படுவதால் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி வருவதாக கூறப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ்தான் நாடு இனி இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆப்கானிஸ்தான் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version