சினிமா செய்திகள்

200 கோடி வசூலை நெருங்கும் கபீர் சிங்!

Published

on

தெலுங்கில் சுமார் 18 கோடி செலவில் எடுக்கப்பட்டு 100 கோடி கிளப்பில் இணைந்த பிளாக்பஸ்டர் திரைப்படம் அர்ஜுன் ரெட்டி, இந்த படத்தின் உரிமையை பல மொழி தயாரிப்பாளர்களும் வாங்கி அதனை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழில் வர்மா என்ற பெயரில் பாலா இயக்கிய படம், நல்லா இல்லைன்னு, ஆதித்ய வர்மா என்ற பெயரில் மாற்றி எடுக்கப்பட்டுள்ளது.

அதே போல பாலிவுட்டில் ஷாகித் கபூர் நடிப்பில் கபீர் சிங் என்ற பெயரில் கடந்த வெள்ளியன்று இந்த படம் வெளியானது.

இதுவரை 188 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது இந்த படம். இந்த வார இறுதிக்குள் 200 கோடி கிளப்பில் இந்த படம் இணைந்துவிடும் என சினிமா வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். இந்த படத்திற்கு எதிராக மும்பையில் டாக்டர்கள் சங்கங்கள் சமீபத்தில் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version