சினிமா செய்திகள்

விஷாலுக்கு வில்லனாக கபீர் துஹான்!

Published

on

சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஷால் நடித்து வருகிறார் இந்த படத்தின் வில்லனாக கபீர் துஹான் நடிக்கிறார்.

படத்தின் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் இந்த படத்தின் வில்லனாக நடிப்பவரின் தகவலை அந்த படத்தின் வில்லனான கபீர் துஹானே கூறியுள்ளார்.

தான் இந்த படத்தில் பயங்கரமான தீவிரவாதியாக நடித்துள்ளேன் என்றும் இந்த படத்திற்காக பல தீவிரவாத சம்பந்தப்பட்ட படங்களை பார்த்து வருவதாகவும், தீவிரவாதம் பற்றிய புத்தகங்களை படித்தேன் என்றும் கூறியுள்ளார்.

விஷாலுக்கு வில்லனாக நடிக்கவுள்ள கபீர் துஹான் படத்தில் நிஜ தீவிரவாதிகளுக்கே சவால் விடும் அளவுக்கு டஃப் கொடுக்கும் வில்லனாக திரையில் அசத்த உள்ளார் என அவர் கூறுவதில் இருந்தே தெரிய வருகிறது.

Trending

Exit mobile version